மாகாண சபை முறைமையை ஒழிப்பது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாண சபை முறைமையினூடாக இறந்த நபரொருவருக்கான இறுதி கிரியைகள் செய்வதற்கான முற்பதிவுகளை இணையத்தினூடாக செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா். #மாகாணசபை #ஒழிப்பு #இராஜாங்கஅமைச்சர் #சரத்வீரசேகர