பிரதான செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் – சுப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் போட்டியில் சுப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி கப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2020 போட்டியின் 2-வது போட்டி நேற்றையதினம் துபாயில் நடைபெற்ற நிலையில் டெல்லி கப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் போட்டியிட்டன.

.நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கப்பிட்டல்ஸ் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில்ல் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 158 எனும் வெற்றிஇலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியும் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களை எடுத்தமையினால் போட்டி இதனால் சமனிலையில் முடிந்தது.

இதையடுத்து வழங்கப்பட்ட சுப்பர் ஓவாில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 2 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 3 ஓட்டங்கை எடுத்து வெற்றி பெற்றுள்ளது. #ஐபிஎல் #சுப்பர்ஓவர் #டெல்லி #பஞ்சாப் #நாணயச்சுழற்சி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap