Home இந்தியா நடிகர் சோனு சூட்டுக்கு, ஐ.நா.வின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது

நடிகர் சோனு சூட்டுக்கு, ஐ.நா.வின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது

by admin

கொரோனா ஊரடங்கு காலத்தில், பல்வேறு உதவிகளை செய்த ஹிந்தி நடிகர் சோனு சூட்டுக்கு, ஐ.நா.வின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். 


குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல போக்குவரத்து வசதி செய்து கொடுத்தமை, ரஸ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தமை , விவசாயிக்கு உழவுஇயந்திரம் வாங்கி கொடுத்தமை ஏழைகளுக்கு உதவி செய்வது என இவர் அதிகளவான உதவிகளைச் செய்துள்ளா்ா.

இந்நிலையில், சோனு சூட்டின் மனிதநேயமிக்க சேவையை பாராட்டி, ஐ.நா. மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இவா் மிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாா்.

இவ்விருதினை இதற்கு முன், பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், ஹொலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லியோனார்டோ டிகாப்ரியோ, பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #சோனுசூட் #ஐநா #மனிதநேய #விருது #கொரோனா#ஊரடங்கு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More