இலங்கை பிரதான செய்திகள்

புகையிரதம் மோதி ஒருவர் மரணம்

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி வந்த புகையிரதம் மோதி இன்று வியாழக்கிழமை காலை நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.


இன்று காலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிாிழந்தவா் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரிய வருகின்றது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பாக காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்  #புகையிரதம் #மரணம் #சௌத்பார் #அடையாளம்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.