
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் ஊடாக நடத்தப்படும் நல்லூர் பிரதேச மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் 2021ஆம் ஆண்டுக்கான மனைப்பொருளியல் டிப்ளோமா கற்கை நெறியுடன் இணைந்த ஆடை வடிவமைப்புக்கான தொழில் முறை கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 18 தொடக்கம் 35 வயதுக்கு உட்பட்ட க.பொ.த சாதாரண தர சித்தி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவில் விண்ணப்பங்களை பெற்று பூரணப்படுத்தி எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாதன் அறிவித்துள்ளார். #ஆடைவடிவமைப்பு #பயிற்சி #விண்ணப்பம் #வடமாகாண
Spread the love
Add Comment