
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சபாநாயகரின் அலுவலகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் சபாநாயகா் மகிந்த யாப்பா அபேவர்தனவும் தன்னை சுய தனிமைக்கு உட்படுத்தியுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்கிய உப காவல்துறை பரிசோதகர் மற்றும் காவல்துறை சாரதி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான உப காவல்துறைரிசோதகர் நாடாளுமன்ற தபாலகத்துக்குச் சென்றுள்ளதால் அதனை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது #கொரோனா #சபாநாயகா் #மகிந்த_யாப்பாஅபேவர்தன #தனிமைப்படுத்தல் #நாடாளுமன்றம்
Spread the love
Add Comment