
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக கட்டட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை பிரிவினரால் நில அளவுத்திட்ட பிரமாணங்கள் போன்றன கணிக்கப்பட்டன.
இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபியை அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Add Comment