
டிக் டொக் செயலியில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவ்வியக்கம் தொடா்பான காணொளியினை பதிவிட்ட இளைஞா் ஒருவா் வத்தளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
25 வயதான குறித்த இளைஞா் விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை ஆதரிக்கும் வகையிலான பதிவுகளை முன்னெடுத்தமையினால் வத்தளை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினா் அவரைக் கைது செய்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் முதலில் முல்லைத்தீவிலும் பின்னர் ஹட்டனிலும் வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #டிக்டொக் #விடுதலைப்புலிகள் #இளைஞா் #கைது #வத்தளை #பிரபாகரன்
Spread the love
Add Comment