சினிமா பிரதான செய்திகள்

நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு படமாகின்றது

நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ள நிலையில் அதில் நடிப்பதற்கு நடிகை தமன்னாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தொிவிக்கப்படுகின்றது.

16 வயதிலேயே கதா நாயகியாக அறிமுகமான ஜமுனா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 1950 – 1960களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் . தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்துள்ள இவா் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


இவரும் நடிகை சாவித்திரியும் நெருங்கிய தோழிகளாக வலம் வந்தவர்கள். சாவித்திரி தான் இவரைத் திரையுலகிற்கு அழைத்து வந்தவர் என்ற தகவல் உண்டு. தற்போது ஜமுனாவை வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து படமொன்று உருவாகவுள்ளது.

இதில் ஜமுனாவாக நடிப்பதற்கு தமன்னாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவா் ஜமுனாவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொண்டு, இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஆர்வமாகத் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்து விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஜமுனா பிரபலமானவர் என்பதால் அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது #நடிகை_ஜமுனா #வாழ்க்கை_வரலாறு #தமன்னா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link