
கொவிட்-19 நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிலிப்பாயைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நீண்டகாலமாக அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறை புலனாய்வுப் பிரிவு இன்று மாலை சண்டிலிப்பாய் சந்தியில் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிக் கொண்டு பயணித்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் மானிப்பாய் காவல்நிலையத்தில் முற்படுத்தப்பட்டதுடன், உழவு இயந்திரத்துடன் மணலும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது
Spread the love
Add Comment