இலங்கை பிரதான செய்திகள்

திருட்டுக் கும்பலை மடக்கிப்பிடித்த கொக்குவிலார்!

கொக்குவிலில் வீடொன்றினுள் புகுந்த திருடர்களின் இருவர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு , காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் இரவு 09.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளை மூவர் அடங்கிய திருட்டுக்கும்பல் புகுந்துள்ளது.

அதனை அவதானித்த அயலவர்கள் , குறித்த வீட்டினை வெளியில் சுற்றி வளைத்து மூன்று திருடர்களையும் , மடக்கி பிடிக்க எத்தனித்த போது , ஒருவர் தப்பியோடிய நிலையில், இருவர் பிடிக்கப்பட்டனர்.

மடக்கி பிடிக்கப்பட்ட இருவரும் சுன்னாகம் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதனை அடுத்து காவற்துறையினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.