உலகம் பிரதான செய்திகள்

3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்: உக்ரேன்!

 1. வொலோடிமிர் ஸெலென்ஸ்கிGetty ImagesCopyright: Getty Imagesயுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிImage caption: உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிஇதுவரை 3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, உக்ரேன் ராணுவம் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.அதில், இந்த படையெடுப்பில் ஈடுபட்ட 3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 டேங்குகள் ஆகியவற்றையும் ரஷ்யா இழந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உக்ரேனின் இந்த அறிவிப்புகளை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் குறித்து ரஷ்யா இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.
 2. உக்ரேன் நெருக்கடி: தற்போது அங்கு என்ன நடக்கிறது? யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பு மூன்றாவது நாளாக தொடர்கிறது.யுக்ரேனில் இரவு முழுவதும் வான் தாக்குதலுக்கான சைரன்கள் ஒலித்ததால், தங்கள் வீடுகள் அல்லது நிலவறைகளில் பதுங்கியுள்ள பலருக்கும் நேற்றைய இரவு தூங்கா இரவாக அமைந்தது.இரவில், தீவிரமான சண்டை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் கீயவ் நகரில் பரவலாக நடைபெற்றதாக எங்களுக்கு செய்திகள் வந்தன.அங்கு இப்போது என்ன நடக்கிறது என்பதை இங்கு வழங்குகிறோம்:
  • ரஷ்ய தாக்குதல்களிலிருந்து தப்பிக்க யுக்ரேன் படைகள் முயற்சித்து வருகின்றன. கீயவில் உள்ள ராணுவப் பிரிவு ஒன்று, நகரின் முக்கிய பகுதி ஒன்றில், ரஷ்ய படையை விரட்டியதாக, யுக்ரேன் ராணுவம் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
  • கீயவில் காலையிலேயே தீவிரமான சண்டை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யுக்ரேன் ஆயுதப்படையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், கீயவின் வாசில்கீவ் பகுதியில் “தீவிரமான போர் நடைபெறுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யா கீயவ் நகரை கைப்பற்ற முயல்வதாக தெரிவித்த நிலையில், அங்கு சண்டை நடைபெற்று வருகிறது.
  • கீயவ் இன்டிபென்டென்ட் (Kyiv Independent) ஊடகம் அளித்த தகவலின்படி, தலைநகர் கீயவில் 50-க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிசூடு சம்பவங்கள் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • எனினும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் கூறுகையில், கீயவில் ராணுவம் நிலைமையை “கட்டுப்படுத்துவதாக” தெரிவித்தார். “இருக்கும் அனைத்து வழிகளிலும் படைகளை நிறுத்துகிறோம்,” என யுக்ரேன் செய்தி வலைதளமான Lb.ua-ல் அவர் தெரிவித்தார்.
  • அமெரிக்க நிர்வாகம் யுக்ரேனுக்கு உதவ 6.4 பில்லியன் டாலர் நிதியுதவியை அளிக்க நாடாளுமன்ற அவையை கேட்டுக்கொண்டுள்ளது.
  • 50 லட்சத்துக்கும் அதிகமான யுக்ரேன் மக்கள் சுற்றியுள்ள நாடுகளுக்கு செல்வார்கள் என, ஐநா முகமைகள் கணித்துள்ளன.Article share tools
 3. யுக்ரேன் நெருக்கடி: கீவ் தெருக்களில் சண்டை, துப்பாக்கி சூடுயுக்ரேன்Getty ImagesCopyright: Getty Imagesகீவ் நகரில் ஊரடங்குImage caption: கீவ் நகரில் ஊரடங்குயுக்ரேனில் தற்போது காலை சுமார் 7.30 மணி ஆகிறது. யுக்ரேன் தலைநகர் கீவில் காலையிலேயே தீவிரமான சண்டை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.யுக்ரேன் ஆயுதப்படையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், கீவின் வாசில்கீவ் பகுதியில் “தீவிரமான போர் நடைபெறுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.கீவ் தெருக்களில் சண்டை நடைபெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கீவ் அரசு முன்னதாக வெளியிட்ட அறிக்கையிலும் சண்டை குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், மக்கள் பாதுகாப்பான இடங்களிலேயே தங்கியிருக்குமாறும், ஜன்னல்கள் அல்லது பால்கனிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கீவில் உள்ள பத்திரிகையாளர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அளிக்கும் தகவல்களிலும், கீவ் தெருக்களில் சண்டை வெடித்துள்ளதாக தெரிய வருகிறது. இதன் காரணமாக, பெரும் சத்தம் மற்றும் துப்பாக்கி சூடு சத்தம் நகரத்தின் மத்தியில் கேட்பதாக, பலரும் விவரித்துள்ளனர்.இதனிடையே, “எதிரி இலக்குகள்” பலவற்றை பகல் பொழுதில் முறியடித்ததாகவும், ரஷ்ய படைகள் யுக்ரேன் நகரங்களை கைப்பற்றுவதை தடுத்து நிறுத்தியதாகவும், யுக்ரேன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.Article share tools
 4. ரஷ்யப் படையெடுப்பைக் கண்டிக்கும் ஐ.நா. தீர்மானம்: இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காதது ஏன்? மனித உயிர்களைப் பறிப்பது எந்தத் தீர்வையும் கொடுக்காது என, ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் மீது இந்தியா தெரிவித்துள்ளது.யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பைக் கண்டிக்கும் வரைவு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்தது ரஷ்யா. இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.பாதுகாப்புக் கவுன்சிலில் நடந்த ஒரு விவாதத்துக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் கண்டனத் தீர்மானத்துக்கு ஆதரவாக 11 உறுப்பு நாடுகள் வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகியவை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தன.இது குறித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கான இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசுகையில், “யுக்ரேனில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது. வன்முறையை விடுத்து வெறுப்பைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புங்கள் என வேண்டுகிறோம். மனித உயிர்களைப் பறிப்பது எந்தத் தீர்வையும் கொடுக்காது. யுக்ரேனில் சிக்கியுள்ள இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்களை மீட்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரே வழி. இந்த காரணங்களுக்காக இந்தியா இந்த தீர்மானத்தில் வாக்களிப்பதைத் தவிர்க்கிறது” என தெரிவித்தார்.

BBC

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.