உலகம் பிரதான செய்திகள்

21 குண்டுகள் முழங்க மக்ரோன் பதவியேற்பு

அதிபர் தேர்தலில் வெற்றியீட்டிய மக்ரோனின் உத்தியோகபூர்வ பதவியேற்பு வைபவம் எலிஸே மாளிகையில் இன்று நடைபெற்றிருக்கிறது. எலிஸே மாளிகையின் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற அரசு வைபவத்தில் மக்ரோனின் துணைவி, குடும்பத்தினர், பிரதமர் ஜீன் காஸ்ரோ உட்பட அரசாங்கப் பிரதிநிதிகள், நாடாளுமன்றங்களின் இரு அவைகளினதும் பிரமுகர்கள், முன்னாள் அதிபர்களான நிக்கலஸ் சார்க்கோசி, பிரான்ஷூவா ஹொலன்ட், முன்னாள் பிரதமர் எத்துவா பிலிப் ஆகியோர் உட்பட சுமார் ஐந்நூறு பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்வில் முன்னாள் அதிபர்கள் கலந்துகொள்வது இதுவே முதல் முறை ஆகும். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தவணைக்கு மீளத் தெரிவாகிய முதல் அதிபர் என்ற வகையில்அவரது உத்தியோக பூர்வ பதவியேற்பு நிகழ்வு புதிய அதிபர் ஒருவரது பதவியேற்பில் காணப்படுவது போன்ற சில வழக்கமான நடைமுறைகளைக் கொண்டிருக்கவில்லை.

1988 இல் பிரான்ஷூவா மித்ரோனும் 2002 இல் ஜக் சிராக்கும் இவ்வாறு இரண்டாவது தவணைக்காலத்துக்குத் தெரிவாகியிருந்தனர். நிகழ்வின் தொடக்கத்தில் 58.55%வீதவாக்குகள் பெற்று மக்ரோன் வெற்றிபெற்றிருப்பதை நாட்டின் அரசமைப்புச்சபையின் தலைவர் (President of the Constitutional Council) முறைப்படி அங்குஅறிவித்தார்.அவருக்கு முன்பாகச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார் மக்ரோன்.

அதன் பிறகு உரையாற்றிய அவர்”அதிக வலிமையான பிரான்ஸ் தேசத்தையும் மனிதர்கள் மேலும் சிறப்பாக வாழ்வதற்கு உகந்த உலகத்தையும் உருவாக்குவதற்கு உறுதிகூறுகிறேன்-என்று பத்து நிமிட உரையில் தெரிவித்தார். எலிஸே வைபவத்தில்” நாட்டின் அதிபொறுப்பு மிக்க காவலர்” என்பதைக் குறிக்கின்ற தங்க மாலை (le collier de la Légion d’honneur) மக்ரோனுக்குச் சூட்டப்பட்டது.

பின்னர் எலிஸே பூங்காவில் இராணுவ அணிவகுப்பை ஏற்றுக்கொள்வ தற்கு முன்பாக அவர் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினார். அச்சமயம் பாரிஸ் நகரில் Hôtel des Invalides பகுதியில் மரபு முறைப்படி 21 பீரங்கிக் குண்டுகள் தீர்க்கப்பட்டன.

மக்ரோன் பதவியேற்ற பின்பு முதல் வெளிநாட்டுப் பயணமாக திங்கட்கிழமை ஜேர்மனி செல்கிறார். அதற்கு முன்பாகஅவர் நாளை ஞாயிற்றுக்கிழமை உலகப் போரின் நிறைவைக் குறிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

——————————————————————–

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 07-05-2022

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.