
இலங்கைக்கு பயணம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இது ஒரு சவாலான நேரம், ஆனால் இலங்கைக்கு வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயக எதிர்காலத்தை அடைய உதவும் வகையில் நாங்கள் தொடர்ந்து உதவி மற்றும் நீண்ட கால கூட்டாண்மையை வழங்குகிறோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ருவிட் செய்துள்ளார்.
உயர்மட்ட தூதுக்குழுவில் ஆசியாவுக்கான திறைச்சேரியின் துணைச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை இராஜாங்கத் தூதர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோரும் அடங்குகின்றமை குறிப்பிட்தக்கது.
அமெரிக்க தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்தனர்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவினர் நேற்று காலை இலங்கையை சென்றடைந்திருந்தனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment