
காலி முகத்திடலில் பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் பிரவேசிக்கக் கூடாது என கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். கோட்டை காவற்துறையினரின் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தகாவற்துறையினர், குறித்த சிலையை சேதப்படுத்தும் திட்டம் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைய முடியாதவாறு உத்தரவு பிறப்பிக்குமாறு காவற்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்
Spread the love
Add Comment