இலங்கை பிரதான செய்திகள்

பருத்தித்துறையில் 13 இளைஞர்கள் கைது

சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை , சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 13 இளைஞர்கள் பருத்தித்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு , கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

பருத்தித்துறை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை , பாவனைகள் மற்றும் போதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற அநாகரிக செயற்பாடுகள் இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் , பொறுப்பதிகாரியின் தலைமையிலான காவல்துறை குழுவினர் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை முன்னெடுத்த போது , வீதிகளில் அநாவசியமாக கூட்டம் கூடி நின்றமை , சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியமை உள்ளிட்ட குற்றங்களில் 13 இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களையும் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , அவர்களை கடுமையாக எச்சரித்து காவல்துறையினர் விடுவித்தனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.