இலங்கை சினிமா பிரதான செய்திகள்

திரைத்துறைக் கலைஞர்களின் சந்திப்பு

வடக்கில் சினிமா துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் கலைஞர்களுடனான சந்திப்பொன்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.

இதில் சிறப்பு வளவாளராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “கோச்சடையான்” உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய எம்மவரான சூரியப்பிரதாப் பங்கேற்றார்.

அவர் தற்போது, மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பகவாதர் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றின் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து பிரபல ஓடிடி தளம் ஒன்றுக்கு வெப் தொடர் ஒன்றை இயக்குகின்றார்.

மேலும், யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம், யாழ். பல்கலைக்கழக நாடகமும் அரங்கியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க.ரதிதரன் மற்றும் அவுஸ்ரேலியாவில் இருந்து வந்திருந்த சினிமா செயற்பாட்டாளர் அருள் பொன்னையா உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். குறித்த சந்திப்பில்,  40 சினிமா கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, இயக்குனர் சூரியபிரதாப்பின் சினிமா சார்ந்த அனுபவப் பகிர்வு , ஈழ சினிமாவின் இன்றைய நிலையும் எதிர்காலமும், அத்துடன் சில தயாரிப்பு முயற்சிகள் பற்றிய தகவல் பரிமாற்றம் என்பன இடம்பெற்றன.

இது ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாக நடந்து முடிந்ததுடன், எம் சினிமா கலைஞர்களுக்கான அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சிறு தூண்டுதலாகவும் அமைந்திருந்தது. இவ்வாறான சந்திப்புக்கள் இனிவரும் காலங்களிலும் அவசியம் என்பதை நிகழ்வில் கலந்து கொண்ட பலர் குறிப்பிட்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.