பிரதான செய்திகள் விளையாட்டு

உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர்  இன்று  ஆரம்பம்

உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர்  இன்று   கட்டாரில் ஆரம்பமாகின்றது. இத்தாலி , அர்ஜென்டீனா, போர்த்துக்கல், பெல்ஜியம், ஸ்பெய்ன், இங்கிலாந்து உள்ளிட்ட 32 அணிகள்   பங்கேற்கும் இந்தத் தொடா்  அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளளது.

நட்சத்திர வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்ஸி, லூகா மோட்ரிச் , லூயிஸ் சுவாரெஸ், கரீம் பென்சிமா , நெய்மர் டி சில்வா ஆகியோரின் கடைசி உலகக்கிண்ண தொடராக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில்  இன்றைய முதலாவது போட்டியில் தொடரை   நடத்தும் கட்டார் ,  ஈக்வடோருடன் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.