இலங்கை பிரதான செய்திகள்

கோலாட்டத்தில் தவறு இழைத்தாக மூன்று வயதான மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

கோலாட்டத்தின் போது தவறு இழைத்ததாக கோலாட்ட தடியால் மூன்று வயதான முன்பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் கோப்பாய்  காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு கோலாட்டம் பழக்கியுள்ளார்.  அதன் போது மாணவன் ஒருவன் தவறு இழைத்ததாக கூறி ஆசிரியர் கோலாட்ட தடியால் மூன்றே வயதான மாணவனை மோசமாக தாக்கியுள்ளார். அதில் மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாணவனின் பெற்றோரினால் , கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து , மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் 36 வயதான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.