இலங்கை பிரதான செய்திகள்

சுன்னாகத்தில் மின் மோட்டர்களை திருடிய குற்றத்தில் மூவர் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகம்  காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இரண்டு மின் மோட்டர்களை திருடிய குற்றத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , திருடப்பட்ட மோட்டர்களும் மீட்கப்பட்டுள்ளன.

சுன்னாகம் ஈவினை பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் இருந்து 4 இலட்ச ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் மின் மோட்டர்கள் இரண்டு களவாடப்பட்டு இருந்தன. அவை தொடர்பில் உரிமையாளரால் சுன்னாகம்  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த  காவல்துறையினா் , ஈவினை பகுதியை சேர்ந்த 18 , 21 மற்றும் 25 வயதுடைய மூன்று இளைஞர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , திருடப்பட்ட இரண்டு மின் மோட்டர்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் காவல்துறையினா்  தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.