Home இலங்கைதனியான தேசிய கீதம் தொடர்பில் வெளியான தகவல்களில் உண்மையில்லை – சிவஞானம்

தனியான தேசிய கீதம் தொடர்பில் வெளியான தகவல்களில் உண்மையில்லை – சிவஞானம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வட மாகாணசபைக்கு தனியான தேசிய கீதம் தொடர்பில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என வட மாகாணசபையின் தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ரங்க கலான்சூரியவிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த சனிக்கிழமை திவயின செய்தித்தாள் வெளியிட்டிருந்த செய்தி அடிப்படையற்றதும் பொய்யான தகவல்களையும் கொண்டமைந்திருந்தது எனவும் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபை நிறுவப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஏனைய மாகாணங்களைப் போன்று வட மாகாணசபையிலும் தனியான ஒர் கீதம் உருவாக்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கை திரிபுபடுத்தப்பட்டு செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More