Home இலங்கைஇதயபூமி ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இதயபூமி ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் மக்களது இதயபூமியான மணலாற்றில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு,சிங்கள மயமாக்கல்,குடியேற்றங்கள்,மற்றும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட இருளுள் இதயபூமி எனும் ஆவணப்படம் வெளியீட்டு வைக்கப்பட்டு உள்ளது.

யாழ்.றக்கா வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை  (12) மாலை 3.30 மணியளவில் வெளியீடு செய்து. வைக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து ஆவண படத்தினை  உத்தியோகபூர்வமாக அரசியல் தலைவர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,சிவில் சமூக பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.

வடமாகாண முதலமைச்சர்,மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ,  நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் என பலரிடம் குறித்த ஆவண படம் கையளிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More