Home இலங்கைபாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான வளங்கள் வழங்கப்படும் – ஜனாதிபதி

பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான வளங்கள் வழங்கப்படும் – ஜனாதிபதி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான வளங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். துரித கதியில் மாற்றமடைந்து வரும் உலகில் பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புத் தரப்பினருக்கு தேவையான சகல வளங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சபுகஸ்ந்த மாகொல பாதுகாப்பு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் நாட்டின் பிரஜை என்ற ரீதியிலும் இலங்கையின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More