Home இலங்கைஜனாதிபதி மலேசியாவிற்கான பயணத்தை ஆரம்பித்தார்

ஜனாதிபதி மலேசியாவிற்கான பயணத்தை ஆரம்பித்தார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவிற்கான பயணத்தை ஆரம்பித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை  மேற்கொண்டு ஜனாதிபதி இன்றைய தினம் மலேசியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதியுடன் 15 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினரும் மலேசியா செல்கின்றனர். 2015ம்  ஆண்டில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மலேசியாவிற்கு செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் போது பல்வேறு இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More