Home இலங்கைசீனாவிற்கு காணிகள் விற்பனை செய்வதனை எதிர்ப்போம் – ஜே.வி.பி.

சீனாவிற்கு காணிகள் விற்பனை செய்வதனை எதிர்ப்போம் – ஜே.வி.பி.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சீனாவிற்கு காணிகள் விற்பனை செய்வதனை எதிர்ப்போம் என ஜே.வி.பி. கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் 15000 ஏக்கர் காணி சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்வதனை அனுமதிக்கப் போவதில்லை எனவும், அரசாங்கத்திற்கு எவ்வித சந்தர்ப்பமும் வழங்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார மையங்களை அமைப்பதற்கு காணிகள் விற்பனை செய்யப்படுதாக அரசாங்கம் கூறிய போதிலும், இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார மையம் 7000 ஏக்கரில் அமைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். காணி விற்பனைக்கு எதிராக எதிர்வரும் ஜனவரி மாதம் பாரியளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More