இலங்கை

இன்றுடன் சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைகின்றன

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்றுடன் நிறைவடைகின்றது. கடந்த 6 ஆம் திகதி நாடுமுழுவதும் 5669 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த முறை பரீட்சையில் ஏழு லட்சம் மாணவர்கள் தோற்றியுள்ளனர்.  பரீட்சை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாடுமுழுவதும் 538 கண்காணிப்பு மத்திய நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. இதேவேளை, பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply