Home இலங்கைவட மாகாணத்தின் அமைதியற்ற செயற்பாடுகளுடன் விடுதலைப் புலிகள் சம்பந்தப்படவில்லை :

வட மாகாணத்தின் அமைதியற்ற செயற்பாடுகளுடன் விடுதலைப் புலிகள் சம்பந்தப்படவில்லை :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று புனவாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பனர்வாழ்வு பயிற்சி வெற்றிகரமாக அமைந்ததால் அவர்கள் மீண்டும்  அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் செய்றபாடுகளில் ஈடுபட மாட்டார்கள் என தெரிவித்த அவர்  எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியில் புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளை முற்றாக நிறைவு செய்து கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற  முன்னாள் போராளிகளுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வின் போது புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூன்று பேரை  சமூகத்துடன் இணைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More