காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.க.வினர் அவரது வாகனம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கருணாநிதிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ‘டிரக்யாஸ்டமி’ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், தி.மு.க.வையும் அக்கட்சியின் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வரும்; வைகோ, இன்றையதினம் காவேரி மருத்துவமனைக்கு சென்றவேளை தி.மு.க.வினர் காரை மறித்து எதிர்ப்பு கோஷமிட்டதுடன் அவரது காரை மருத்துவமனைக்கு செல்லமுடியாதபடி கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனால் கருணாநிதியை பார்க்காமலேயே வைகோ திரும்பிச் சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை வைகோவின் கார் தாக்கப்பட்டது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் செயலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.