169
புஸ்ஸல்லாவவையில் குழவி தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணமடைந்துள்ளார். புஸ்ஸல்லாவ தொத்சைல்ட் தோட்டம் வை.ஆர்.சி பிரிவை சேர்ந்த 50 வயதான சன்முகம் ரவிசந்திரன் என்பவர் நேற்று சனிக்கிழமை தனியார் தோட்டத்திற்கு தொழிலுக்காக சென்று விட்டு வீடு திரும்பும் வேளையில் குழவி தாக்குதலுக்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ளார்.
இவர் திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவரது சடலம் புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்;டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கபட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love