Home இலங்கைமுக்கிய பிரபு ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டப்பட்டதா?

முக்கிய பிரபு ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டப்பட்டதா?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையின் முக்கிய பிரபு ஒருவரை கொலை  செய்யத் திட்டமிடப்பட்டதாகத் தெரிவித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாபீபா கும்பல்களுடன் தொடர்பு பேணிய சீனப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் முக்கிய பிரபு ஒருவரை கொலை செய்யும் நோக்கில் இலங்கை வந்தாரா என்பது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு பிரிவினரும் குற்ற புலனாய்வுத் திணைக்களமும் இணைந்து விசாரணைகளை நடத்த உள்ளன.
கசினொ சூதாட்ட மையமொன்றில் கடமையாற்றி வந்த Ni Ma Ze Ren என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா வீசாவில் இலங்கை வந்த குறித்த சீனப் பிரஜையின் வீசா காலம் பூர்த்தியடைந்த நிலையிலேயே அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More