184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உணவுப் பொதிகளின் விலை 10 ரூபாவினால் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது. நாளை முதல் இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்பட உள்ளது.
அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதனால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச் சாலை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love