Home இலங்கைஜனாதிபதி இறந்து விடுவார் என்ற எதிர்வு கூறல் பொய்யானது – நிமால் போபகே

ஜனாதிபதி இறந்து விடுவார் என்ற எதிர்வு கூறல் பொய்யானது – நிமால் போபகே

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவார் என்ற எதிர்வுகூறல் பொய்யானது என ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழந்துவிடுவார் என ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பதாக எதிர்வு கூறல்கள் சில ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான எதிர்வு கூறல்களினால் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More