Home இலங்கைசமூக ஊடக வலைமையப்புக்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது – கூட்டு எதிர்க்கட்சி

சமூக ஊடக வலைமையப்புக்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது – கூட்டு எதிர்க்கட்சி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சமூக ஊடக வலையமைப்புக்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது எனவும் இலங்கையில் சமூக ஊடக வலையமைப்புக்களை தடை செய்வதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் கடற்படைத் தளபதி ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் சமூக ஊடக வலையமைப்புக்கள் மற்றும் ஏனைய ஊடகங்களின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறியதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More