கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்டத்தில் முதலமைச்சரின் நிதியொதுக்கீடு தொடர்பான விவாததத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆற்றிய உரை……
கௌரவ தவிசாளர் அவர்களே
இம்முறை வரவு செலவுத்திட்டத்திலே எங்களின் மாகாண சபைக்கு 53 வீதமான நிதி குறைக்கப்பட்டுள்ளமையானது அதிகாரப்பகிர்வு குறித்து சிறுபான்மை மக்கள் மத்தியில் சாதகமான நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ள நல்லாட்சியின் வாக்குறுதிகள் குறித்து மீண்டும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டுகளை பார்ப்போமேயானால் கடந்த 2008 ஆம் ஆண்டு 1205 மில்லியன் ரூபா முலதன நிதியும் 2009 ஆம் ஆண்டு 1048 மில்லியன் ரூபா மூலதன நிதியும் 2010 ஆண்டு 1593மில்லியன் ரூபா மூலதன நிதியும் 2011 ஆம் ஆண்டு 1065 மில்லியன் ரூபா நிதியும் 2012 ஆம் ஆண்டு 1192 மில்லியன் ரூபா நிதியும் 2013 ஆம் ஆண்டு 1217 மில்லியன் ரூபா நிதியும் 2014 ஆம் ஆண்டு 1340 மில்லியன் ரூபா மூலதன நிதியும் 2015 ஆம்ஆண்டு 1590 மில்லியன் ரூபா மில்லியன் ரூபா நிதியும் வழங்கப்பட்ட வந்த போது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நம்பிக்கையை நாம் வென்றெடுத்தமையால் 2016 ஆம் ஆண்டு 3762 மில்லியன் ரூபா மாகாண சபை வரலாற்றில் என்றுமில்லாதவாறு நிதியொதுக்கப்பட்டது,அதற்காக அவர்களுக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.
மத்தியரசிலே மாகாண சபைகளுக்கான நிதிகள் முடக்கப்படும் சம்பிரதாயம் இந்த அரசிலும் தொடரக்கூடாது என்பதற்காக நாம் சில விடயங்களை சுட்டிக்காட்டியாக வேண்டும். இம்முறை நாம் கல்வித்துறையை பார்ப்போமேயனால் நாட்டிலே 10 ஆயிரத்து 12 பாடசாலைகள் காணப்படுவதுடன் அவற்றில் 350 தேசிய பாடசாலைகள் காணப்படுவதுடன் அவற்றில் 96 .5 வீதமான பாடசாலைகள் மாகாண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளாகவே உள்ளது என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்
கிழக்கு மாகாணத்தை நாம் எடுத்துக் கொண்டால் கிழக்கு மாகாணத்தில் 30 தேசிய பாடசாலைகள் காணப்படுகையில் 1008 மாகாண பாடசாலைகள் உள்ளன.
ஆனால் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் 190 மில்லியன் ரூபா மாத்திரமே கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 76 ஆயிரத்து 900மில்லியன் ரூபா மத்தியரசு தம் வசம் வைத்திருக்கும் நூற்றுக் கணக்கான பாடசாலைகளுக்கு ஒதுக்கியுள்ளமையானது கிழக்கு மாகாணத்தின் கல்வியை சீரழிக்கும் விடயமா என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது
சுகாதாரத்துறையை நாம் எடுத்துக் கொண்டால் கிழக்கு மாகாணத்திலே 226 வைத்தியசாலைகள் உள்ளதுடன் இதில் 12 தள வைத்தியசாலைகளும் 46 பிராந்திய வைத்தியசாலைகளும் 60 ஆரம்ப்ப்பிரிவு வைத்தியசாலைகளும் மூன்று ஆயுர்வேத தள வைத்தியசாலைகளும் 5 மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைகளும் மூன்று பஞ்ச கர்ம வைத்தியசாலைகளும் மூன்று கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகளும் மற்றும் 44 மத்திய ஆயுர்வேத மருந்தகங்களும் உள்ளன.
ஆனால் இம்முறை மாகாணத்தின் சுகாதாரத்துறைக்கு 265 மில்லியன் ரூபா மத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுடன் தேசிய சுகாதாரத்துறைக்கு 1 இலட்சதது 61 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுககுவது எந்த வகையில் நியாயப்படுத்த முடியும் என்பதை கேட்க விரும்புகின்றேன்
13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வு என்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கு நூறு வீதம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறி வரும் நிலையில் அவற்றுக்கான நிதியிலும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன அவற்றில் மூன்று மாநகர சபைகள் ஐந்து நகர சபைகள் 37 பிரதேச சபைகள் உள்ளளதுடன் அவற்றில் 10 ஆயிரம் கிலோ மீற்றருக்கு வீதிகள் செப்பனிடப்பட வேண்டியுள்ளதுடன் 120 சந்தைகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளது
ஆனால் இம்முறை 125 மில்லியன் ரூபா மாத்திரமே உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் ஒரு உள்ளூராட்சி மன்றத்துக்கு 3 மிலலியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை வேதனையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளதுடன் அதிகாரப்பரவலாக்கம் குறித்த வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் 2 இலட்சத்து 40 மிலலியன் ரூபாவை மத்திய அரசின் அமைச்சுக்காக முடக்கி வைத்துள்ளது
1080 கிலோமீற்றர் வரையான வீதிகளை மாகாணத்தில் புனரமைக்க வேண்டியுள்ளதுடன் மகாணத்துக்கு வீதிகளை செப்பனிட 225 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் 1 கிலோ மீற்றர் வீதியை புனரமைக்க 10 அல்லது 12 ரூபாய்கள் தேவைப்படுகின்றன. இதன் மூலம் எமது மாகாணத்தின் 20 அல்லது 25 கிலோமீற்றர் வீதிகளையே செப்பனிட முடியும் .ஆனால் மத்தியரசிலேயே 12 ஆயிரத்து 200கிலோ மீற்றர் வீதிகளை செப்பனிட ஒரு இலட்சத்து 63 ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
இவ்வாறான பல அநீதிகள் மாகணங்களுக்கு இழைக்கப்படும் போது எவ்வாறு தேசிய அபிவிருத்தி குறி்த்து நாம் கனவு காண முடியும்.
ஆனால் ஒன்றைக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்,இவற்றையெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க நான் தயாரில்லை ,கிழக்கு மாகாணத்துக்கு சேர வேண்டிய நிதி ஒவ்வொரு மத்தியரசின் அமைச்சலும் உள்ளதஞ.அவற்றையெல்லாம் பறித்தெடுத்து இன்ஷா அல்லாஹ் எமது மாகாணத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பேன் என்பதை மிக உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்,
அத்துடன் நாம் எமது மாகாணத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை செலவழிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளதாக இங்கு எதிர்க்கட்சியிலுள்ள சிலர் குற்றம் சுமத்துகின்றார்கள்.அவர்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.நாம் எமது பணிகளை நிறைவு செய்து 1200 மில்லியன் ரூபாய்க்கான பற்றுச் சீட்டுக்களை வைத்துக் கொண்டு அதற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்கு மத்திய அரசின் படிகளில் அடிக்கடி ஏறிக் கொண்டும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கின்றோம்.அத்துடன் எமது மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு சதம் கூட மத்தியரசுக்கு திரும்பிப் போக வில்லை என்பதையும் நான் பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தளபாடப் பற்றாக்குறை மற்றும் ஆளணி வெற்றிடங்கள் உள்ளதாக எதிர்க்கட்சியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினார்கள்
அவர்கள் அவர்களுடைய காலத்தில் தமக்குரிய பணிகளை உரிய வகையில் செய்திருந்தால் இந்த தளபாட மற்றும் ஆளணி வெற்றிடங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை நாம் சொல்லியாக வேண்டும்
அத்துடன் ஆளணி இருப்பது குறித்து எவவித ஆவணப்படுத்தலும் இல்லையெபன்பதையும் அந்த வெற்றிடங்கள் உள்ளது என்பதையும் முன்னைய ஆடசியாளர்கள் மறைத்திருந்தார்கள் என்ற உண்மையையும் நாம் கூறியாக வேண்டும்.
அது மாத்திரமன்றி கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்து ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நிதியொதுக்கீடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அடுத்த ஆண்டிற்குள் கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இணைந்து இநத தொழிற்சாலைகளை அமைத்து எமது பகுதிகளில் தொழில்வாயப்பின்றி அல்லலுறும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்வோம் என்பதையும் நாம் இந்த இடத்தில் கூற விரும்புகின்றேன்