குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகாி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் இன்று 22-12-2016 திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை பத்து மணிக்கு பொது நிா்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சா் வஜிர அபேயவா்த்தன, பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா ஆகியோா் இணைந்து புதிய பிரதேச செயலக கட்டடத்தை நாடாவை வெட்டி திறந்து வைத்துள்ளனா்.
பூநகாி வாடியடிச் சந்தியில் அமைந்துள்ள புதிய பிரதேச செயலக கட்டடம் என்ரிப் திட்டத்தின் 14 மில்லியன் ரூபாக்களும், பொது நிா்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 60 மில்லியன் ரூபாவிலும் அமைக்கப்பட்டது.
முன்னதாக சர்வமத பிரா்த்தனையை தொடா்ந்து புதிய அலுவலக கட்டடம் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டதோடு, நினைவு பெயா் கல்வெட்டினை மாவை சேனாதிராஜா அவா்கள் திரை நீக்கம் செய்து வைத்துாா்
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட மேலதிக அரச அதிபா் சத்தியசீலன், பூநகாி, கரைச்சி, கண்டாவளை,பளை பிரதேச செயலாளா்கள், சர்வமத குருமார்கள், அரச உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் முப்படைகளின் தளபதிகள் பொலீஸ் அதிகாரிகள், பொது மக்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.