Home இலங்கைவடமாகாண சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது:-

வடமாகாண சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது:-

by admin

வடமாகாண சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வடமாகாண சபைக்கு 22 ஆயிரத்து 728.117 மில்லியன் ரூபா நிதி செலவீனத்திற்காக ஒத்துக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அறிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் குறித்து கடந்த ஐந்து நாட்களாக விவாதங்கள் இடம்பெற்று வந்த நிலையிலேயே, குறித்த வரவு செலவுத் திட்டம் ஏகனமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் கோரியிருந்த போதிலும், அவர்களை சமாதானப்படுத்தி இதற்கு ஒப்புதல் அளிக்க வைத்ததாக எதிர்கட்சி தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More