Home இலங்கைதமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது:-

தமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது:-

by admin


கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மீன்பிடித்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு இந்திய அரசு விடுத்துள்ள கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்திய அரசின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக கொழும்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

நல்லெண்ண அடிப்படையில் மீனவர்கள் விடுவிக்கப்படுகின்ற போதிலும், மீன்பிடி படகுகளை எச்சந்தர்ப்பத்திலும் விடுவிக்க தயாரில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் 36 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More