160
உலகின் உயரமான கிறிஸ்மஸ் மரத்தை அமைத்து இலங்கை சாதனை படைத்துள்ளது.
உலகின் மிகவும் உயரமான செயற்கை கிறிஸ்மஸ் மரத்தை அமைத்த பெருமை இலங்கையைச் சாரும் என்பது குறிப்பிடத்தக்கது. 100 மீற்றர் உயரத்திலான மரமொன்றை அமைப்பதற்கே திட்டமிடப்பட்டிருந்தது எனவும், இடையில் ஏற்பட்ட இடையூறுகள் தடைகள் காரணமாக கிறிஸ்மஸ் மரத்தின் உயரத்தை குறைத்துக்கொள்ள நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், முன்னைய உலக சாதனை கிறிஸ்மஸ் மரத்தை விடவும் இந்த மரம் உயரமானது என தெரிவிக்கப்படுகிறது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இந்த கிறிஸ்மஸ் மரம் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love