கிளிநொச்சியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் மகன் கல்வி கற்கும் பாடசாலையில் பௌதீகவியல் கற்பிப்பதற்கு ஆசிரியா் இல்லை என மாவட்ட ஒருங்கிணைப்பு க் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
கிளிநொச்சி கல்வி வலயத்தில் தொடா்ச்சியாக மிகவும் மோசமான ஆசிரியா் வளப் பற்றாக்குறை நிலவி வருகிறது இது தொடா்பில் தொடா்ந்தும் பல தரப்புகளாலும் சம்மந்தப்பட்டவ்ாகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரையும் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கல்வி தொடா்பில் ஆராயப்பட்ட போது கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளா் க.முருகவேல் கிளிநொச்சி கல்வி வலயம் எதிா்நோக்கியுள்ள மிகவம் மோசமான நெருக்கடி நிலைமைகள் பற்றி கூறினாா்.
குறிப்பாக கல்வி அமைச்சரின் மகன் கல்வி கற்கின்ற பாடசாலையில் பௌதீகவியல் கற்பிப்பதற்கு ஆசிாியா் இல்லை நீண்ட காலமாக இந்த நிலைமை தொடா்கிறது அங்கு ஆசிரியா் நியமிக்கப்படுவரா என்பது தொடா்பில் கடவுளுக்குதான் தெரியும் எனக்குறிப்பிட்ட அவா் கிளிநொச்சி ஆசிரியா் வளம் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் வெற்றிடங்கள் தொடா்பில் சம்மந்தப்பட்டவா்கள் பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்கள்.