தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 29ஆவது நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தினார்.அதனை தொடர்ந்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இன் நிகழ்வில் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலை எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் அவர்களின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர். நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு:-
196
Spread the love
previous post