Home இந்தியாதமிழகத்தின், விருதுநகர், சாத்தூர், சங்கரக்கோட்டை பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 3 பேர் பலி:-

தமிழகத்தின், விருதுநகர், சாத்தூர், சங்கரக்கோட்டை பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 3 பேர் பலி:-

by admin

இந்தியாவின் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சங்கரக்கோட்டை பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முற்பகல் 11 மணியளவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த வேளை இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு அதிகாரிகள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். வெடி விபத்து ஏற்பட்ட அறையில் இருந்து உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே அறையில் அதிகமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டதே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் தலைமறைவாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More