கோப் அறிக்கையை அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிக்கின்றதா என ஜே.வி.பி.யின் பாராளுன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் இந்த அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் இதுவரையில் அது குறித்து விவாதம் எதுவும் நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோப் குழு அறிக்கை பாராளுமன்ற ஆவணம் எனவும் இது குறித்து அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து விவாதம் நடத்தி ஒர் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோப் குழு அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறித்தும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மோசடிகாரர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.