Home இலங்கைதபால் புகையிரதத்தில் குண்டுப் பீதி

தபால் புகையிரதத்தில் குண்டுப் பீதி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தபால்  புகையிரதத்தில் குண்டு ஒன்று வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.  கொழும்பு கோட்டேயிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கவிருந்த இரவு நேர புகையிரதத்தில் இவ்வாறு குண்டு ஒன்று உள்ளதாக தகவல் கிடைத்ததனையடுத்து  சோதனையிடப்பட்டுள்ளது.

காவல்துறை விசேட அதிரடிப்படைப் பிரிவு, காவல்துறையினர் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் ஆகியோர் நீண்ட நேரம்  புகையிரதத்தினை சோதனையிட்டுள்ளனர்.
ஒரு மணித்தியாலத்திற்கு மேல்  சோதனையிட்டும் எவ்வித குண்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பின்னர் புகையிரதம் மருதானை புகையிரத நிலையத்திற்கு எடுத்துச் சென்று தொடர்ந்தும் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More