குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் ஆண்டு மக்களுக்கு துன்பமானதாக அமையும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் சில கைதிகளை பார்வையிடச் சென்றிருந்த போது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மலரும் 2017ம் ஆண்டு மக்களுக்கு துன்பியல் அனுபவங்களைக் கொண்டதாகவே அமையும் எனவும் அரசாங்கம் சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ள அவர் நாட்டை ஐக்கியப்படுத்தி, பல்வேறு அவிபிருத்தித் திட்டங்களை தாம் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த அரசாங்கம் அனைத்து அரச சொத்துக்களையும் விற்பனை செய்வதில் நாட்டம் காட்டி வருகின்றது என சுட்டிக்காட்டியுள்ள மகிந்த அபிவிருத்தி விசேட நியமம் அனைத்து மாகாணசபைகளிலும் தோல்வியடையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.