Home இலங்கைபாணின் விலை உயர்த்தப்படாது – திறைசேரி

பாணின் விலை உயர்த்தப்படாது – திறைசேரி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாணின் விலை உயர்த்தப்படாது என திறைசேரி அறிவித்துள்ளது. பாண் மற்றும் பணிஸ் உள்ளிட்ட  வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என திறைசேரியின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சீனி மற்றும் பாம் எண்ணெய் ஆகியனவற்றின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த வரி உயர்விற்கு சமாந்திரமாக வெதுப்பக உற்பத்திகளை அதிகரிக்க நேரிடும் எனவும் வெதுப்பக உரிமையாளர்கள் குறிப்பட்டிருந்தனர்.

எனினும், உள்நாட்டில் சில்லறை விலைகள் உயர்த்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள திறைசேரியின் அதிகாரி உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை உயர்த்த இடமளிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More