Home இலங்கைஜொன்ஸ்டனின் புதல்வர் பதவியிழந்தார்

ஜொன்ஸ்டனின் புதல்வர் பதவியிழந்தார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் மாகாணசபையின் பிரதம அமைப்பாளர் பதவியை இழந்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டனின் புதல்வரும், வடமேல் மாகாணசபையின் உறுப்பினருமான ஜொஹான் பெர்னாண்டோவே  பிரதம அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதங்களில் தொடர்ச்சியாக பங்கேற்காத காரணத்தினால் இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளார். நான்கு நாட்களாக நடைபெற்ற விவாதங்களில் அவர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பணி நீக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்கப்பட்டதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாகாணசபை உறுப்பினர் பண்டார ராஜபக்ஸ மாகாணசபையின் ஆளும் கட்சி பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More