குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அபிவிருத்தி விசேட நியமச் சட்டத்தை ஒரு முட்டாளே வரைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இந்த உத்தேச சட்டத்தை உருவாக்கிய சட்டத்தரணி சட்டம் தெரியாத ஒருவராகத்தான் இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்கவே இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் அரசாங்கம் விசேட அமைச்சர் ஒருவருக்கோ அல்லது வேறு தரப்பினருக்கோ கூடுதல் அதிகாரங்களை வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அபிவிருத்தியை ஏற்படுத்த சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது எனவும் எனினும் இது விசேட அமைச்சர் பதவியொன்றை உருவாக்க வேண்டும் என்று பொருள்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.