136
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பால் மா விலை உயர்வு குறித்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை 810 ரூபாவிலிருந்து 927 ரூபாவாக உயர்த்துவதற்கு பால் மா நிறுவனங்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகாரசபையிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலையை 325 ரூபாவிலிருந்து 375 ரூபாவாக உயர்த்தவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பால் மாவிற்காக விசேட நிவாரணம் வழங்கப்பட்டு வருவதனால் இவ்வாறு பால் மாவின் விலையை உயர்த்த அனுமதிக்கப்பட முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
Spread the love