Home இலங்கைசுதந்திரக் கட்சியின் சில தரப்புக்கள் மஹிந்தவுடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு

சுதந்திரக் கட்சியின் சில தரப்புக்கள் மஹிந்தவுடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில தரப்புக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவது குறித்து ஜனாதிபதி தீவிர கவனம் செலுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார கோரியுள்ளார்.

சில சக்திகள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் ஆளும் கட்சியின் சில தரப்புக்கள் மஹிந்த தரப்புடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இணைந்து செயற்படுவது குறித்து ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More