குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனநாயக ரீதியாக நிறுவப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டில் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்த அறிவிற்பிற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனநாயக ரீதியில் ஆட்சி அமைத்த இந்த அரசாங்கத்தை பதவிக் காலம் முடியும் முன்னதாக கவிழ்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த காலம் முதல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர் மஹிந்த ராஜபக்ஸ அரசியல் சாசனத் திருத்தங்களின் ஊடாகவே தனது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மஹிந்த மக்களுக்கு சேவையாற்றுவதனை விடவும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சேவையாற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.